தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜெர்சி 7க்கு கிடைத்த அங்கீகாரம் - டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனியின்  ஏழாம் எண் ஜெர்சியை எந்த வீரரும் பயன்படுத்தமாட்டார்கள் என பிசிசிஐ மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்சி 7க்கு கிடைத்த அங்கீகாரம்

By

Published : Jul 24, 2019, 10:57 PM IST

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இனி நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகள் தங்களது பெயர்கள் பொறித்த ஜெர்சியை அணிந்துக் கொள்வார்கள். இதனால், டெஸ்ட் போட்டிகளில் எந்த வீரர் ஃபீல்ட் செய்கிறார் என்ற குழப்பம் இனி ரசிகர்களுக்கு வராத வகையில் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கவுள்ளது. இதில், பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் ஒதுக்கப்பட்டிருக்கும் தங்களுக்கான ஜெர்சி நம்பரைதான் இதிலும் பயன்படுத்துவார்கள் என பிசிசிஐ மூத்த அலுவலர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழும் தோனி, 2014இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ரசிகர்கள் நிச்சயம் 7ஆம் எண் ஜெர்சியை தோனியோடுதான் ஒப்பிட்டுக்கொள்வார்கள். இதனால், அவரது ஜெர்சி எண்ணான 7ஆம் நம்பரை யாரும் பயன்படுத்தமாட்டார்கள்” என்றார்.

முன்னதாக, கிரிக்கெட்டின் கடவுளான சச்சினின் ஜெர்சியான 10ஆம் நம்பருக்கு ஓய்வு தர வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்திய பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அவரது ஜெர்சி நம்பரை ஒருநாள் போட்டியில் பயன்படுத்தியதால் ரசிகர்கள் ஷர்துல் தாக்கூரை வறுத்தெடுத்தனர். தன்பிறகு, அவர் தனது 54ஆவது ஜெர்சி நம்பருடன் ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

தோனியின் ஜெர்சி நம்பரை எந்த வீரரும் பயன்படுத்தவில்லை என்றால், பிசிசிஐ அவருக்கு தரும் கௌரவம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெர்சி விதிமுறை, இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details