T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் ஜெர்சி அணி ஐக்கிய அரபு நாடுகள் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற ஜெர்சி அணி முதலில் பேட்டிங்கத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜெர்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அதன்பின் அந்த அணியின் பெஞ்சமின் வார்ட் அதிரடியாக விளையாடி அணியின் ரன் கணக்கை உயர்த்த தொடங்கினார்.
அதிரடியாக விளையாடிய வார்ட் 24 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரிகள் என 47 ரன்களை விளாசித்தள்ளினார். இதன் மூலம் ஜெர்சி அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது.