அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், அடிப்படை தொகையான ரூ. 1 கோடியிலிருந்த இந்திய பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டை ரூ. 3 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் ஏலத்தில் வாங்கியது.
ஒன்பது சீசன்களாக ஐபிஎல் ஏலத்தில் விலைபோகும் வீரர்! - jaydev unadkat sold at Ipl Auction for 9 times
கொல்கத்தாவில் நடைபெற்ற 13ஆவது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் தேர்வானதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்திய பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் ஒன்பதாவது முறையாக ஏலத்தில் விலைபோயுள்ளார்.
ஜெய்தேவ் உனாத்கட்
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒன்பது சீசன்களிலும் ஏலத்தில் விலைபோன முதல் வீரர் என்ற புதிய சாதனையை ஜெய்தேவ் படைத்துள்ளார். கடந்த 2017 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 11.5 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் அவரை ஏலத்தில் விடுவிடுத்து ரூ. 8.4 கோடிக்கு தேர்வுசெய்தது.
இதையும் படிங்க: ஐபிஎல் ஏலம்: இந்தாண்டும் கோடிகளில் புரளும் தமிழ்நாடு வீரர்