தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கும்ளேவாக மாறிய பும்ரா: வைரல் காணொளி - பிசிசிஐ

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பயிற்சியின் போது முன்னாள் வீரர் அனில் கும்ளேவைப் போல சுழற்பந்து வீச்சில் அசத்திய காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Jasprit Bumrah emulates Kumble's action and nails it
Jasprit Bumrah emulates Kumble's action and nails it

By

Published : Jan 31, 2021, 8:55 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், வேகப்பந்து வீச்சாளருமாக திகழ்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதற்காக சென்னை வந்துள்ள பும்ரா தனது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து நேற்று (ஜன.30) மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பும்ரா, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் அனில் கும்ளேவின் பாணியில் சுழற்பந்து வீசியசத்தி, பேட்ஸ்மேனை திணறச்செய்தார். வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்து வீசும் காணொளியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த பிசிசிஐயின் ட்வீட்டில், "நாம் அனைவரும் பும்ராவின் யார்க்கர்களையும், பவுன்சர்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவரை இந்த வேகப்பந்து வீச்சாளரிடம் கண்டிராத ஒரு திறனை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அது முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ளேவின் பந்துவீச்சு உடல்மொழியைப் பின்பற்றி பும்ரா சுழற்பந்துவீச முயற்சிக்கும் தருணத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளோம்" என்று பதிவிட்டு, பும்ரா சுழற்பந்துவீசும் காணொளியையும் இணைத்துள்ளது.

பிசிசிஐ வெளியிட்டுள்ளா அக்காணொளியானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: 'கடின உழைப்பே 200 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவியது' - காகிசோ ரபாடா

ABOUT THE AUTHOR

...view details