இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்களை எடுத்தது.
அதனைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் பிராவோவின் விக்கெட்டை இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா வீழ்த்தினார். இதன் மூலம் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இதற்கு முன் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிராசத் மற்றும் முகமது சமி ஆகியோர் 13 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதனை பும்ரா முறியடித்துள்ளார் .
மேலும் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுநாள் வரை வைத்திருந்த குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்தியவர் என்ற சாதனையையும் முறியடித்துள்ளார் பும்ரா. அஸ்வின் 2597 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தற்போது பும்ரா 2464 பந்துகளில் எடுத்து முறியடித்துள்ளார்.