தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹைதராபாத் அணியில் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஜேசன் ராய் - ஜேசன் ராய்

ஹைதராபாத் அணி ஜேசன் ராயை அவரது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

ஹைதராபாத் அணியில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக ஜேசன் ராய்
ஹைதராபாத் அணியில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக ஜேசன் ராய்

By

Published : Mar 31, 2021, 10:51 PM IST

டெல்லி: வரும் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல்லில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஜேசன் ராயை எந்த அணியும் எடுக்காமல் தவிர்த்தனர். ஆனால் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் ராய்.

ஜேசன் ராய் 2017ஆம் ஆண்டில் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார், 2018இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.

2020 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக முதல்கட்ட போட்டியிலேயே மிட்செல் மார்ஷ் விலகிய நிலையில், இந்தத் தொடரில் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஹைதராபாத் அணி ராயை அவரது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details