ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் மிகக்குறுகிய காலத்தில் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வான நட்சத்திர வீரராக வலம் வந்தவர் ஜேசன் பெக்ரெண்டாரஃப். வேகப்பந்து வீச்சாளரான இவர் முதுகெலும்பு அறுவை சிகிச்சை காரணமாக 2019/20ஆம் ஆண்டிற்கான அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “அறுவை சிகிச்சையைப் பற்றி யோசித்து வருகிறேன். இதேபோன்ற அறுவை சிகிச்சை செய்த பல ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுடன் நான் பேசியுள்ளேன். அவர்கள் அனைவரும் அறுவை சிகிச்சை முடிவுகள் பற்றி நல்ல விதமாகவே கூறியுள்ளனர். அதனால் அடுத்த சீசனில் அணியில் மீண்டும் இடம்பெறுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.