இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதிமுதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு நாட்டு வீரர்களும் நேற்று சிட்னிக்குச் சென்றடைந்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன், தனது வீட்டில் கீழே விழுந்ததில், அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.