தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் இடம்பெற்றதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட்டில், தனது 150ஆவது போட்டியில் களமிறங்கும் உலகின் ஒன்பதாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் டீன் எலகர், ஆண்டர்சன்னின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்க்ரம்மும் 20 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 10 ஓவர்களுக்குள்ளாகவே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி தடுமாறி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு தற்போது அணியின் கேப்டன் டூ பிளெசிஸ், ஹம்சா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் , சாம் கர்ரான் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:விஸ்டன்: 10 ஆண்டுகளில் ஐந்து சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை!