நடந்து வரும் டிஎன்பிஎல் தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான சில சாதனைகள் அறங்கேறி வருகின்றன. அதிலும் சர்வதேச வீரர்களுக்கு சாவல்விடும் சாதனைகளும் அடங்கும்.
அப்படி ஒரு சாதனையைத்தான் தற்போது திண்டுக்கல் அணிக்காக விளையாடும் நாராயணன் ஜெகதீசன் செய்து அசத்தியுள்ளார். அவர் 25 போட்டிகளில் விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளார்.
நேற்று நடைப்பெற்ற மதுரை பேந்தர்ஸ்க்கு எதிரான போட்டியில் 87 ரன்களை எடுத்ததன் மூலம் டிஎன்பிஎல் டி20 தொடரில், 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ஜெகாதீசன்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் விராட் கோலி, பாபர் அசம் போன்ற சர்வதேச வீரர்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் பாபர் அசம் 26 டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 27 டி20 போட்டிகளில் விளையாடி 1000 ரன்களை கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, 25 போட்டிகளிலேயே 1000 ரன்களை டந்ததன் மூலம் சர்வதேசம் அல்லாத டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக 1000 ரன்களாகும். சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டால் இந்த சாதனையை ஜெகாதீசன் அங்கும் நிகழ்த்துவார் எனபதில் ஐயமில்லை.