இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்தபிறகு ஜடேஜாவுடன் சுழற்பந்துவீச்சு குறித்து நான் சிறிது நேரம் ஜாலியாக உரையாடினேன். களத்தில் அவர் இருந்தாலே அவருடைய சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ராக்ஸ்டார்.
அவர் பேட்டிங்கில் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையை ஃபீல்டிங்கின்போதும் கடைப்பிடிப்பார். அவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். அவரைப் போல நானும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற விருப்பும் எனக்கு உள்ளது" என்றார்.
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில், 197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஷ்டன் ஆகாரின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 89 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
இதனால், ஆஸ்திரேலிய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில், ஆஷ்டன் அகார் ஹாட்ரிக் உள்பட ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதைப்பெற்றார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் பிரெட் லீக்கு அடுத்தபடியாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் ஆஷ்டன் அகார் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யுனிவர்ஸ் பாஸ்' கெயில் உருவம் பதித்த மோதிரம்