தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘ஜடேஜாவை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்’- முகமது கைஃப் - ரவீந்திர ஜடேஜா

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை இதுநாள் வரை குறைத்து மதிப்பிட்டுள்ளனர் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

Jadeja is grossly underrated and deserves more respect: Kaif
Jadeja is grossly underrated and deserves more respect: Kaif

By

Published : Dec 5, 2020, 9:45 PM IST

இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியின்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தலையில் அடிப்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதையடுத்து மாற்று வீரராக சஹால் பந்துவீசினார்.

பின்னர் மீதமுள்ள டி20 தொடரிலிருந்து ஜடேஜா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. மேலும் அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் ஜடேஜாவை இதுநாள் வரை குறைத்து மதிப்பிட்டுள்ளனர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் “இரண்டு தொடர்ச்சியான ஆட்டங்களில் ரவீந்திர ஜடேஜா இந்திய கிரிக்கெட் அணிக்கு எவ்வளவு உதவியுள்ளார் என்பதை உணர்த்தியுள்ளது.

கடந்த 11ஆண்டுகளாக அவரது திறனை இந்திய அணியினர் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஆனால் தனது திறன் என்ன என்பதை அவர் நிரூபித்துள்ளார். ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நான்காவது முறையாக எம்.எம்.ஏ சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிய ரிது போகத்!

ABOUT THE AUTHOR

...view details