தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

”சாதனை புரிந்தவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்”- மஞ்ச்ரேக்கருக்கு ஜடேஜா பதிலடி - SANJAY MANJREKAR

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், போட்டி வர்ணனையின் போது ரவிந்திர ஜடேஜாவை ‘துண்டு துணுக்கு வீரர்’ என்று வர்ணித்து சர்ச்சையை கிளப்பியது. இதற்கு ரவிந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

”மக்களை மதிக்க கற்றுகொள்ளுங்கள்”- மஞ்சரேகருக்கு ஜடேஜா பதிலடி

By

Published : Jul 4, 2019, 12:09 PM IST

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வர்ணனை செய்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரிடம் ரவிந்திர ஜடேஜாவை பற்றி கேள்வி எழுப்பட்டது. அப்போது அவர்,

”நான் துண்டு துணுக்கு வீரரின் பெரிய ஆதரவாளன் இல்லை. ஜடேஜா 50ஓவர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் இந்த நிலையில் தான் உள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேச்சுக்கு ஆல் ரவுண்டர் ஜடேஜா ட்விட்டர் பதிலடி கொடுத்துள்ளார்.

"உங்கள் வயிற்றுபோக்கு வாய்மொழிகளை நிறுத்திகொள்ளுங்கள்”

அதில், 'நீங்கள் விளையாடியதை விட இருமடங்கு போட்டிகளில் விளையாடி விட்டேன். இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறேன். முதலில் சாதனையாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வயிற்றுபோக்கு வாய்மொழிகளை நிறுத்திக்கொள்ளுங்கள்' என பதிலடி கொடுத்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details