செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடருக்காக ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தொடர் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் 21 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி, தனியார் ஜெட் விமானம் மூலம் இங்கிலாந்து வந்தடைந்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியில் கடந்த ஓராண்டாக இடம் பிடிக்காமல் இருந்த ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ், தற்போது மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளதை தனக்கு கிடைத்த வெகுமதியென தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்டோனிஸ், ‘கடந்த ஓராண்டு காலமாக ஆஸ்திரேலியாவின் தேசிய அணியில் இடம்பெறாமலிருந்தது சில மாற்றங்களை என்னுள் கொண்டு வந்தது. அதன்படி எனது அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்யவிரும்பினேன். தனித்திறன் படைத்த வீரராக என்னை மாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.