தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பெருந்தன்மையாக நடந்த கார்க்... மன்னிப்புக் கேட்ட வங்கதேச கேப்டன்...! - இந்திய யு19 கேப்டன் ப்ரியம் கார்க்

இறுதிப் போட்டியில் வென்றபின், எங்களிடம் வங்கதேச வீரர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதல்ல என இந்திய யு19 கேப்டன் ப்ரியம் கார்க் தெரிவித்துள்ளார்.

it-wasnt-our-day-indian-u19-skipper-priyam-garg-after-wc-loss
it-wasnt-our-day-indian-u19-skipper-priyam-garg-after-wc-loss

By

Published : Feb 10, 2020, 3:36 PM IST

யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வங்கதேசம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உலகக்கோப்பையைக் கைப்பற்றிய பின், வங்கதேச அணியினர் இந்திய வீரர்களுடன் அடிதடியில் ஈடுபட்டனர். இது சர்வதேச அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தோல்வி குறித்தும், வங்கதேச வீரர்களின் செயல்பாடுகள் பற்றியும் இந்திய கேப்டன் ப்ரியன் கார்க் பேசுகையில், ''இந்த தோல்வியை எளிதாகவே எடுத்துக்கொண்டுள்ளோம். விளையாட்டில் நிச்சயம் வெற்றி, தோல்விகளை எளிதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். சில நாள்களில் வெற்றிபெறுவோம். சில நாள்களில் தோல்வியடைவோம்.

ஆனால் வெற்றிக்கு பின் வங்கதேச வீரர்களின் செயல்பாடுகள் சரியானதல்ல. அதுபோன்ற நடவடிக்கைகள் களத்தில் நடந்திருக்க கூடாது'' என்றார்.

பின்னர் வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி பேசுகையில்,'' களத்தில் நடந்தவைக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். என்ன நடந்ததோ, அது நடந்திருக்கக் கூடாது.

அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது சரியாக தெரியவில்லை. என்ன நடக்கிறது என்பதை நானும் கேட்கவில்லை. உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும் போது சில நேரங்களில் நம்மை நாம் கட்டுபடுத்த முடியாது.

வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி

எந்த இடத்திலும் இதுபோன்ற செயல்களை தவிர்த்திருக்க வேண்டும். எதிரணியை எப்போதும் மரியாதையாய் நடத்த வேண்டும். விளையாட்டின் மாண்பை மதிக்கவேண்டும். கிரிக்கெட் என்பது ஜெண்டில்மேன் கேம். அதனால் நடந்தவைக்காக எங்கள் அணி சார்பாக நான் மன்னிப்புக் கோருகிறேன்'' என்றார்.

இதையும் படிங்க: வீரர்களுக்குள் ஏற்பட்ட அடிதடி... சில்லறைத்தனமாக நடந்த வங்கதேச வீரர்கள்...!

ABOUT THE AUTHOR

...view details