தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'பீல்டிங் செய்கிறவருக்கு எதுக்கு பேட்?' -  வினோத் காம்ப்ளி - இன்ஸாமாம் உல் அக்

இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, 1997ஆம் ஆண்டு நடைபெற்ற சஹாரா கோப்பை தொடரில் தன்னை அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

It was shocking: Kambli on Inzamam's 1997 Sahara Cup crowd incident
It was shocking: Kambli on Inzamam's 1997 Sahara Cup crowd incident

By

Published : Aug 2, 2020, 1:45 AM IST

இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி சமீபத்தில் அளித்த பேட்டியில், 1997ஆம் ஆண்டு நடைபெற்ற சஹாரா கோப்பை கிரிக்கெட் தொடரில் தன்னை அதிர்ச்சியளித்த விஷயம் குறித்துப் பேசியுள்ளார்.

”1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான சஹாரா கோப்பை தொடரின்போது, இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது நான் எனது மற்ற வீரர்களுடன் உடைமாற்று அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.

அப்போது பீல்டிங் செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் இன்ஸமாம்-உல்-அக், திடீரென பெவிலியனிலிருந்த மாற்று வீரர் ஒருவரிடம் பேட்டை எடுத்துவருமாறு கூறினார். அதேபோல் அந்த வீரரும் மைதானத்திற்கு பேட்டை எடுத்துச் சென்றார்.

இச்சம்பவம் எங்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், பீல்டிங் செய்து கொண்டிருக்கும் வீரர், எதற்காக பேட்டை எடுத்து வரச் சொல்ல வேண்டும் என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்றார்.

இதையும் படிங்க:பாண்டிங்கை விட தோனியே சிறந்த கேப்டன் - அஃப்ரிடி!

ABOUT THE AUTHOR

...view details