இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என தென்னாப்பிரிக்கா அணி இழந்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டூ ப்ளஸிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி டாஸ் வென்று 500 ரன்களை குவித்திவடுகின்றனர். பின்னர் இரண்டாம் நாளின் இறுதியில் இருட்டில் எங்களை பேட்டிங் செய்ய பணித்து, மூன்று முக்கிய விக்கெட்டுகளை எளிதாக கைப்பற்றிவிடுகிறார்கள். இதனால் அழுத்தம் ஏற்பட்டு தோல்வியை தழுவுகிறோம். இது அனைத்து போட்டிகளிலும் காப்பி, பேஸ்ட் செய்வதுபோல் நடந்தது.
தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் விளையாடும் இளைஞர்களை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தென்னாப்பிரிக்கா அணியில் ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள் தயார் செய்ய வேண்டும். ஆனால், பொருளாதாரம் இதற்கு முக்கிய பிரச்னையாக உள்ளது எனத் தெரிவித்தார்.