இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் சுப்மன் கில். இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுக வீரராகக் களமிறங்கினார்.
அத்தொடரில் சுப்மன் கில், இரண்டு அரைசதங்களுடன் 259 ரன்களை எடுத்து இந்திய அணி தொடரைக் கைப்பற்ற உதவியாக இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுப்மன் கில், அந்த அணிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘ஆஸ்திரேலிய அணிக்கெதிராக விளையாடுவது போருக்குச் செல்வதைப்போல் இருந்தது’ எனத் தெரிவித்துள்ளார்.