தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆஸி., தொடருக்கு தயாரான இஷாந்த் சர்மா?

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Ishant Sharma to be fit for Australia tour: Report
Ishant Sharma to be fit for Australia tour: Report

By

Published : Oct 26, 2020, 8:09 PM IST

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து முற்றிலுமாக விலகினார்.

மேலும் இந்தாண்டு இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணிகெதிரான தொடரிலும் இஷாந்த் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிகெதிரான டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்பார் என இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், இஷாந்த் சர்மா காயத்திலிருந்து குணமடைந்துள்ளார். இருப்பினும் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக, குறைந்தது ஒரு பயிற்சி ஆட்டத்திலாவது விளையாடுவது அவசியம் என தேசிய கிரிக்கெட் அகாடமி அறிவுறுத்திவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இத்தகவலின் மூலம் ஆஸ்திரேலிய அணிகெதிரான தொடரில் இஷாந்த் சர்மா பங்கேற்பார் என்பது உறுதியாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 17ஆம் தேதி அடிலேய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ பரப்புரைக்கு ஆதரவளித்த பாண்டியா!

ABOUT THE AUTHOR

...view details