இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
தசைப்பிடிப்பு மற்றும் காயம் காரணமாக இஷாந்த் சர்மா, ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக நேற்று (அக்.12) அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடரிலும் இஷாந்த் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இஷாந்தின் காயம் தீவிரமடைந்து வருவதால், அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இஷாந்த் சர்மா விளையாடிய ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் 30 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பிளே ஆஃப் கனவில் மோதும் சென்னை - ஹைதராபாத்! கனவை நனவாக்க போவது யார்?