தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்படுமா ஐபிஎல் தொடர்?

கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்துவருவதால், அடுத்த மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் சொன்ன தேதியில் தொடங்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

is-bcci-contemplating-to-host-all-60-matches-of-ipl
is-bcci-contemplating-to-host-all-60-matches-of-ipl

By

Published : Mar 18, 2020, 2:32 PM IST

2020ஆம் ஆண்டு விளையாட்டு ரசிகர்களுக்கு மிகவும் முக்கிய ஆண்டாகப் பார்க்கப்பட்டது. ஜூன் - ஜூலை மாதங்களில் தொடங்கவிருந்த யூரோ கோப்பை, ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் ஒலிம்பிக், அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் என ஒவ்வொரு மாதத்திற்கும் முக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடிவுசெய்யப்பட்டன. ஆனால் கரோனா வைரசால் உலகம் முழுவம் விளையாட்டுப் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே யூரோ கோப்பைக் கால்பந்து தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஏற்கனவே ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்தே ஐபிஎல் தொடர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஒருவேளை கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகமானால் ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எக்காரணத்தைக் கொண்டும் ஐபிஎல் தொடரை பிசிசிஐ ரத்துசெய்ய வேண்டாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஐபிஎல் தொடர் நடத்த முடியவில்லை என்றால் வெளிநாட்டு வீரர்கள் தேசிய அணிகளுக்குத் திரும்பிவிடுவர்.

இதனால் ஐபிஎல் தொடரை மற்ற மாதங்களில் நடத்துவது இயலாத ஒன்று. வெளிநாட்டு வீரர்கள் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பதால், ஐபிஎல் தொடர் செப்டம்பரில் நடக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் தோனியின் எதிர்காலம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details