தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சச்சினுடன் குத்துச்சண்டை விளையாடும் இர்ஃபான் பதான் மகன்...! - Road Safety World Series T20 2020

சச்சின் டெண்டுல்கருடன் இர்ஃபான் மகன் குத்துச்சண்டை விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

irfan-pathan-son-imran-played-boxing-with-sachin
irfan-pathan-son-imran-played-boxing-with-sachin

By

Published : Mar 8, 2020, 11:31 PM IST

உலக சாலை பாதுகாப்புக்கான டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. அதில் இந்திய லெஜன்ட்ஸ் அணியை வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி எதிர்கொண்டது. இந்திய அணியில் சச்சின், சேவாக், ஜாகீர் கான், இர்ஃபான் பதான், கைஃப், யுவராஜ் சிங் என நட்சத்திர ஜாம்பவான் வீரர்கள் ஆடினர். இதனால் நேற்றையப் போட்டி ரசிகர்களுடைய நினைவுகளை மீண்டும் கிளறியது. இதனால் சமூக வலைதளங்களில் சச்சினின் ரசிகர்கள் அனைவரும் சச்சினைக் கொண்டாடினர்.

சச்சின்

இதனிடையே இன்று காலை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இர்ஃபான் பதான் மகன் இம்ரான் க்யூட்டாக சச்சினுடன் குத்துச்சண்டை விளையாடியிருந்தார். அந்த வீடியோவுடன், இம்ரான் என்ன செய்தான் என அவனுக்கு தெரியாது. ஆனால் வளரும் போது தெரிந்துகொள்வான் எனப் பதிவிட்டிருந்தார்.

இர்ஃபான் பதான் மகனுடன் க்யூட்டாக சச்சின் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதனைப் பலரும் ரசித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:எனது வாழ்வில் முக்கியமான 5 பெண்கள்... சச்சின் டெண்டுல்கர்!

ABOUT THE AUTHOR

...view details