தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு: இர்பான் பதான்! - இர்பான் பதான் ஆதரவு

ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நான்கு நாள்கள் ஆடும் டெஸ்ட் போட்டிகளுக்கு, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

irfan-pathan-backs-idea-of-four-day-test
irfan-pathan-backs-idea-of-four-day-test

By

Published : Jan 7, 2020, 4:50 PM IST

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து ஐந்து நாள்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டியை நான்கு நாள்களாக நடத்துவது குறித்து ஐசிசி சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இந்த யோசனைக்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான், ஐசிசியின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''நான் பலநாள்களாக நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் பற்றி பேசிவருகிறேன். நான்கு நாள்கள் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகள் நிச்சயம் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஆடப்படும் உள்நாட்டுத் தொடரான ரஞ்சி டிராபி போட்டிகள் நான்கு நாள்கள் தான் ஆடப்படுகிறது. அதில் பலப் போட்டிகளில் முடிவு எட்டப்பட்டும் வருகிறது. இதனை ஏன் சர்வதேச போட்டிகளில் செய்யக்கூடாது.

தற்போதைய சூழலில் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் நான்கு நாள்களிலேயே முடிவு எட்டப்படுகிறது. அனைத்து போட்டிகளும் முடிவுக்காக தான் விளையாடப்படுகிறது. இதனால் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு நிச்சயம் எனது ஆதரவு உண்டு'' என்றார்.

இதையும் படிங்க: 'டெஸ்ட் கிரிக்கெட் அழிவதை கங்குலி ஏற்றுக்கொள்ளமாட்டார்' - சோயப் அக்தர்

ABOUT THE AUTHOR

...view details