சீனாவுடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்னைகளுக்குப் பிறகு, சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் பரவலாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக, கடந்த மாதம் பல்வேறு முன்னணி சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு சீனாவின் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பாக இருந்ததால், அந்நிறுவனத்தையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியது ட்ரீம் 11! - ட்ரீம் 11
14:50 August 18
இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) டி20 தொடரின் இந்தாண்டுக்கான டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் உரிமத்தை ட்ரீம் 11 நிறுவனம் ரூ. 222 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு சீனாவின் விவோ நிறுவனத்தினுடைய ஸ்பான்ஸர்ஷிப் தடை செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பிற்காக அமேசான், பைஜூஸ், ஜியோ, ட்ரீம் 11, பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிட்டன.
இந்தாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் உரிமத்திற்கான ஏலம் இன்று (ஆக.18) நடைபெற்றது. இதில் ட்ரீம் 11 நிறுவனம் ரூ.222 கோடிக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் உரிமத்தைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியானது. இத்தகவலை ஐபிஎல் தலைவர் பிரீஜேஷ் படேல் உறுதிபடுத்தியுள்ளார்.
ட்ரீம் 11 நிறுவனத்தின் இந்த டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் உரிமமானது இன்று (ஆக.18) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அங்கு தோனி இருக்கிறார்; ஜாக்கிரதையாக பந்துவீசுங்கள்’ - இர்பான் வார்னிங்!