கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் அதிகரித்துவரும் நிலையில், விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டாம் என மத்திய அரசு அனைத்து கிரிக்கெட் சங்கத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனால் திட்டமிட்டப்படி ஐபிஎல் தொடர் தொடங்குமா என ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்தது.
இதனிடையே பல்வேறு மாநில அரசுகளும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி ஐபிஎல் தொடரை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதிக்குப் பதிலாக, ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கப்படும் எனத் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல்வேறு நாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஐபிஎல் தொடர் நடக்காமல் இருக்காது. எனவே அனைத்து வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கும் வகையில் ஏப்ரல் 15ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது பலரது மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் ஏப்ரல் 15ஆம் தேதி தொடர் தொடங்கப்படவுள்ளதால் திட்டமிட்டபடி தொடரை முடிப்பதற்கு அதிகளவிலான டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ட்ரம்ப் அறிவுறுத்தல்!