ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அணியில் ஏதேனும் மாற்றத்தைச் செய்வது வழக்கம். அதேபோல் வரவுள்ள ஐபிஎல் தொடரில் அணியின் பெயரை மாற்றவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதனிடையே நேற்று (பிப். 17) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளிலிருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரை ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று மாற்றம் செய்ததோடு, அணியின் புதிய இலட்சினையையும் (லோகோ) வெளியிட்டுள்ளது.