2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஐபிஎல் தொடருக்கான அணிகள் அதிகமாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி நடத்துவதற்கான வேலைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாநில கிரிக்கெட் சங்க அலுவலர்கள் கூறுகையில், '' பலம் குறைந்து காணப்படும் மாநில அணிகளுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் ஐபிஎல் தொடரின் மூலம் பல திறன் வாய்ந்த வீரர்களை கண்டறிய முடியும். அதனால் ரஞ்சி டிராபி தொடருக்கு முன்பாக சையத் முஷ்டாக் அலி தொடர் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது'' என்றார்.
அவ்வாறு சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் நடத்தப்படும் பட்சத்தில் வீரர்களின் பயிற்சிக்கான மைதானங்கள், பயோ பபுள் சூழல் என செலவுகள் அதிகமாகும்.
இதைப்பற்றி கூறுகையில், '' குறைந்தது 10 மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் பயோ பபுள் சூழல் ஏற்படுத்த முடியுமா என கேட்கப்படும். அதன்பின்னர் தான் அது குறித்த முடிவுகள் எடுக்கப்படும். பிசிசிஐ கேள்விக்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் நல்ல முடிவை கூறினால், சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர் முடிந்த இரு வாரங்களில் நிச்சயம் ரஞ்சி டிராபி தொடர் நடக்கும்'' என்றார்.
இதனிடையே பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. அதில் பங்கேற்கும் 6 அணிகளுக்கும் பயோ பபுள் சூழலை ஹையத் மற்றும் நோவோடெல் ஹோட்டல்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் விரைவாக உள்நாட்டு கிரிக்கெட் தொடரை பிசிசிஐ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அனுஷ்கா தனது நாயை கட்டுப்படுத்த தேவையில்லை'- விராத் கோலிக்கு காங்கிரஸ் ஆதரவு!