தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2019, 7:55 PM IST

ETV Bharat / sports

டிகே கேப்டனாக தொடர்வார் - கொல்கத்தா பயிற்சியாளர் மெக்கல்லம்

ஐபிஎல் அடுத்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கே செயல்படுவார் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்

dinesh karthik, brendon mccullum, தினேஷ் கார்த்திக்
dinesh karthik, brendon mccullum, தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2020 சீசனில் பங்கேற்கவுள்ள வீரர்களின் ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் வீரர்களைத் தேர்வு செய்வதில் மும்முரம் காட்டினர்.

இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனை, வாங்குவதில் டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இயான் மோர்கனை ரூ. 5.25 கோடிக்கு வாங்கியது.

பின்னர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸையும் கொல்கத்தா அணி ரூ.15.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதுவே ஐபிஎல் ஏலத்தில் வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட அதிக தொகையாகும். இது தவிர இந்திய வீரரான ராகுல் திரிபாதி ரூ. 60 லட்சத்திற்கும், வருண் சக்கரவர்த்தி ரூ. 4 கோடிக்கும் கொல்கத்தா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனிடையே ஏலத்தின் இடைவேளையின்போது பேசிய கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், "கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கே அடுத்த சீசனிலும் கேப்டனாக தொடர்வார். எங்கள் அணியை அனுபவம் வாய்ந்த வீரர் வழி நடத்த வேண்டும் என எண்ணுகிறோம்.

இப்போது எங்கள் அணியில் சிறந்த கேப்டனான இயான் மோர்கனும் இடம்பெற்றுள்ளார். சிறந்த ஃபார்மில் உள்ள அவர் நான்காம் வரிசையில் கலக்குவார். இவர் கொல்கத்தா அணிக்கு கிடைத்த சிறந்த சொத்தாக இருப்பார் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிக் பாஷ் டி20: கவாஜா, அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர்ஸ் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details