இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ராபின் உத்தப்பா. 35 வயதான இவர் கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ராபின் உத்தப்பா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.