இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் வரும் ஏப்ரல் 9ஆம் தேதிமுதல் கோலாகலமாகத் தொடங்குகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது பயிற்சிகளைத் தொடங்க ஆரம்பித்துள்ளன. அதன் ஒருபகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் உள்ளிட்டோர் தங்களது பயிற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.