மும்பை: இந்தியாவில் இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் உள்ளூர் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என, ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 9 இல் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்
13:57 March 07
13:57 March 07
13:35 March 07
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. தற்போது, இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஐபிஎல் தொடரை முடிந்த வரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.
ஏப்ரல் இரண்டாம் வாரம் முதல் ஐபிஎல் தொடரின் 14அவது சீசனின் லீக் போட்டிகளை தொடங்க, பிசிசிஐ தீவிரம் காட்டியது. அதன் ஒருபகுதியாக, குறைந்த அளவிலான வீரர்கள் ஏலத்தையும் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் 14 ஆவது சீசன் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் நடைபெறும் என, ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டி மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும். முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் என்றும், இறுதி போட்டி மே 30 ஆம் தேதி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
இத்தொடரின் அனைத்து போட்டிகளும் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் மைதானங்களில் நடைபெறும். தேர்தல் களம் சூடுப்பிடித்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொடரில் வெற்றிபெற ரோகித் இன்னிங்ஸ் மிக முக்கியம் - விராட் கோலி