தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"இந்த வெற்றி ஐபிஎல் போட்டிகளில் மீண்டு வர உதவும்" - கே.எல்.ராகுல்! - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி இரண்டு புள்ளிகளை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி எங்கள் அணி ஐபிஎல் போட்டிகளில் மீண்டு வர உதவும் என கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

By

Published : Oct 19, 2020, 8:27 AM IST

ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.18) நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 177 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது. சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்களை மட்டுமே எடுத்தது.

பின்னர் 6 ரன்களை இலக்காக கொண்ட மும்பை அணி 5 ரன்களை மட்டும் எடுத்து மீண்டும் ஒரு சமன் ஆட்டத்தை உறுதி செய்தது. இரண்டாவது சூப்பர் ஓவர் ஆட்டத்தில் மும்பை அணி 1 விக்கெட்டு இழப்பிற்கு 11 ரன்களை எடுத்தது. ஆனால் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஆட்டத்தின் வெற்றிக்கு வித்திட்டார்.

பரபரப்பான இப்போட்டியில் பஞ்சாப் அணி 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுகுறித்து பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், " மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி இரண்டு புள்ளிகளை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 7 தோல்விகளுக்கு மத்தியில் ஒரு புதிய வெற்றி இனிமையானது.

தோல்விகள் எப்போதும் நடக்காது. இனிவரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் கடினமான முயற்சியில் ஐபிஎல் போட்டிகளில் மீண்டு வர முயற்சிக்கிறோம்" எனத் தெரிவித்தார். ஒன்பது ஆட்டங்களில் ஆறு புள்ளிகளுடன் பஞ்சாப் அணி ஆறாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக நாளை(அக்.20) துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் டெல்லி அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்

ABOUT THE AUTHOR

...view details