தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: போட்டி அட்டவணை தயார்! - ஐபிஎல் நிர்வாகி பிரிஜேஷ் பட்டேல்

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில் போட்டிக்கான அட்டவணை நாளை (செப் 6) வெளியாகிறது.

IPL 2020
IPL 2020

By

Published : Sep 5, 2020, 10:59 PM IST

13ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் கரோனா பரவல் காரணமாகத் தள்ளிப்போன நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகள் வரும் 19ஆம் தேதிமுதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான போட்டி அட்டவணை நாளை (செப் 6) வெளியிடப்படும் என ஐபிஎல் நிர்வாகத் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்கும் அணியைச் சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மூன்றாம் கட்டமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, உரிய மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சி.எஸ்.கே. அணியின் முன்னணி வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காகப் போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இதையும் படிங்க: டி20 :பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details