தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: முதல் போட்டியிலேயே சிஎஸ்கே - மும்பை மோதல்! - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

IPL 2020: MI, CSK to play in season opener, no Saturday double-headers
IPL 2020: MI, CSK to play in season opener, no Saturday double-headers

By

Published : Feb 16, 2020, 8:28 AM IST

இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் வரும் மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தொடருக்கான முழு அட்டவணை நேற்று வெளியானது.

அதில், மார்ச் 29ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள 13ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி இரவு எட்டு மணிக்கு தொடங்கவுள்ளது.

ஐபிஎல் அட்டவணை

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின் எவ்வித போட்டியில் விளையாடமால் இருக்கும் தோனி, இப்போட்டி மூலம் மீண்டும் கிரிக்கெட்டுக்கு ரிஎண்ட்ரி தரவுள்ளார். அதேசமயம், கடந்த ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் மோதிய இவ்விரு அணிகள், இம்முறை தொடரின் முதல் போட்டியிலேயே மோதவுள்ளதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஐபிஎல் அட்டவணை

இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதன்பின், மே 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ள இந்த சீசனின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்ரச்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடரின் இறுதிப்போட்டி மே 24ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:விரைவில் ஓய்வை அறிவிப்பேன் - சோயப் மாலிக்!

ABOUT THE AUTHOR

...view details