தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் காரணமாக இந்திய வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தி வைப்பு?

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுக்கு பிசிசிஐ சர்பில் அடுத்த மாதம் பயிற்சி நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

India team training camp
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியின்போது

By

Published : Jul 30, 2020, 5:56 PM IST

ஐபிஎல் 13ஆவது சீசன் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன் அகமதாபாத்திலுள்ள மோடேராவில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிசிசிஐ உயர்மட்ட குழு முடிவு செய்தது.

அதன்படி ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வரை இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் பிசிசிஐ-யிடமிருந்து வரவில்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியில் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களான சட்டீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஐபிஎல்-இல் விளையாட இருக்கும் வீரர்கள் தங்கள் சார்ந்த அணிகளில் இணைந்து, துபாயில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.

இந்தச் சூழ்நிலையில், அகமதாபாத்தில் பயிற்சி மேற்கொண்டு பின்னர் துபாய்க்கு செல்வதென்பது தற்போதைய சூழ்நிலையில் வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பிசிசிஐ விவாதித்து முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க தற்போது ஐபிஎல் தொடர் விளையாடாத வீரர்களான புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் தாங்கள் வசித்து வரும் நகரங்களில் பயிற்சி மேற்கொள்வார்களா அல்லது பிசிசிஐ சார்பில் சிறப்பு பயிற்சி ஏற்பாடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: 500 விக்கெட்டுகளை வீழ்த்துவது ஜோக் இல்லை; ஸ்டூவர்ட் பிராடை பாராட்டிய யுவராஜ் சிங்!

ABOUT THE AUTHOR

...view details