தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 30, 2020, 3:25 PM IST

ETV Bharat / sports

பஞ்சாபிற்கு எதிராக மீண்டும் அரங்கேறுமா டிவாட்டியாவின் மேஜிக்?

இன்று இரவு நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடவுள்ளது.

ipl-2020-in-form-kxip-look-to-continue-charge-vs-rr
ipl-2020-in-form-kxip-look-to-continue-charge-vs-rr

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை மும்பை அணி மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. இதனிடையே நேற்றைய போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தியதால், ப்ளே சுற்றுக்கு முன்னேறுவதற்கு பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு இடையே பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெல்லும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், ஐபிஎல் தொடர் மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கவுள்ள முக்கியப் போட்டியில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

முதல் 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றிருந்த பஞ்சாப் அணி, மும்பை அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் பெரும் வலிமையுடன் விளையாடிவருகிறது. ராகுல், மயாங்க் மட்டுமே சிறப்பாக ஆடிவந்த நிலையில், கெய்ல் வருகைக்குப் பின் அனைத்து வீரர்களும் அணிக்குப் பங்களிப்பை அளித்துவருகின்றனர். குறிப்பாக பந்துவீச்சில் ஷமி, ஜோர்டன், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், மேக்ஸ்வெல் ஆகியோர் மிரட்டலாக ஆடிவருகின்றனர்.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் தொடரில் அவ்வப்போது வெற்றிபெற்று வந்தாலும், வலிமையான மும்பை அணியை கடந்த போட்டியில் வீழ்த்தியுள்ளதால், அந்த அணி மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை நாள்களாக சொதப்பிவந்த சாம்சன், ஸ்டோக்ஸ் ஆகியோர் விஸ்வரூபம் எடுத்துள்ளனர்.

அதனால் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. ஆனால் அந்த அணியில் ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபாலைத் தவிர்த்து பந்துவீச்சில் அனைவரும் சொதப்புகின்றனர்.

இந்த அணிகள் கடந்த போட்டியில் மோதியபோது ஆல் ரவுண்டர் டிவாட்டியா கடைசி நேரத்தில் மேஜிக் நிகழ்த்தினார். அதனால் மீண்டும் அதுபோன்ற ஒரு மேஜிக் நடக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முதலும் கோலி, சதமும் கோலி - மாஸ் காட்டிய பும்ரா!

ABOUT THE AUTHOR

...view details