இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளும் தங்களது சொந்த மண்ணில் ஏழு போட்டிகளில் விளையாடும்.
அந்தவகையில், இந்த சீசனில் ஜெய்ப்பூருக்கு அடுத்தப்படியாக முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டாவது சொந்த மைதானமாக கவுகாத்தி மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கவுகாத்தியின் பார்சப்ரா கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் அணி டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக முறையே ஏப்ரல் 5, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.