தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐ.பி.எல்., 2020: பலமும்..பலவீனமும் - டெல்லி கேப்பிட்டல்ஸ்!

இம்மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

IPL 2020: Delhi Capitals keen to win maiden IPL crown
IPL 2020: Delhi Capitals keen to win maiden IPL crown

By

Published : Sep 12, 2020, 6:49 PM IST

ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனான 2008ஆம் ஆண்டு முதல் களம் கண்டு வரும் அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்).

ஒவ்வொரு சீசனின் போதும் பல்வேறு நட்சத்திர வீரர்களை வைத்து விளையாடிய டெல்லி அணி, இதுவரை மூன்று முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சிறந்த ஃபார்மிலிருந்த டெல்லி அணி நிச்சயம் இறுதிப் போட்டிக்கு செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுடனே வெளியேறியது. இதனால் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத அணிகளின் பட்டியலிலும் இடம்பிடித்தது.

ஸ்ரேயாஸ் ஐயர் - ரிக்கி பாண்டிங்

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தாண்டு ஜேசன் ராய், ஹெட்மையர், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அஜிங்கியா ரஹேனே என வீரர்களை ஏலத்தி வாங்கி குவித்தது டெல்லி அணி. இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் வாய்ப்பு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு உள்ளது என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அணியின் பலம் :

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்த வரை மைதானங்கள் அனைத்தும், சுழற்பந்துவீச்சாளரக்ளுக்கு சாதகமானதாக இருக்கும் என்பதால், டெல்லி அணிக்கு இது மிகச்சிறந்த தொடராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஷிகர் தவான்

காரணம் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோருடம், சந்தீப் லமிச்சானே, அக்ஸர் படேல் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசுவர் என்பதால், டெல்லி அணிக்கு அது பலமாக கருதப்படுகிறது.

அதேசமயம் சுழற்பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொள்ளும் திறன் கொண்ட அஜிங்கியா ரஹேனே, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயார் ஆகியோருடன், அதிரடியில் மிரட்டும் பிரித்வி ஷா, ரிஷப் பந்த், ஹெட்மையர் ஆகியோரும் அணிக்கு கூடுதல் பலத்தை செர்க்கின்றனர்.

இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்தாண்டு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை.

ரவிச்சந்திரன் அஸ்வின்

அதேசமயம் அணியின் பயிற்சியாளர்களாக ரிக்கி பாண்டிங், முகமது கைஃப், சமூவேல் பத்ரீ போன்ற சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளதால் இந்தண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி புதிய சரித்திரத்தைப் படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அணியின் பலகீனம்:

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பல்கீனம் என்று பார்த்தால் ஜேசன் ராய் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது தான். குறிப்பாக ஜேசன் ராய் பேட்டிங்கிலும், கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சிலும் அணியின் பலத்தை அதிகரித்திருப்பர்.

காகிசோ ரபாடா

மேலும் தற்போதுள்ள டெல்லி அணியில் காகிசோ ரபாடா மட்டுமே தொடர்ச்சியாக 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன் பெற்றுள்ளார். அதேசமயம் அனுப வேகப்பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையும் டெல்லி அணியில் குறைவாகவே உள்ளது.

இதனால் இந்திய வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மாவின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆவேஷ் கான் போன்ற இளம் வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டு மட்டுமே டெல்லி அணியால் ஆட்டத்தை தீர்மாணிக்க முடியும்.

இஷாந்த் சர்மா

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, ஷிகர் தவான், ஷிம்ரான் ஹெட்மையர், பிருத்வி ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், கீமோ பால், டேனியல் சாம்ஸ், அலெக்ஸ் கேரி, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சந்தீப் லமிச்சானே, இஷாந்த் சர்மா, மோஹித் சர்மா, அவேஷ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷல் படேல், அமித் மிஸ்ரா, அன்ரிச் நார்ட்ஜே.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

பயிற்சியாளர்கள்:ரிக்கி பாண்டிங் (தலைமை பயிற்சியாளர்), முகமது கைஃப் (உதவி பயிற்சியாளர்), சாமுவேல் பத்ரீ (சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்), ரியான் ஹாரிஸ் (பந்துவீச்சு பயிற்சியாளர்), ஸ்ரீராம் சோமயஜுலா (அணி ஆய்வாளர்), தனஞ்சய் கவுசிக் (உதவி பிசியோதெரபிஸ்ட்), ரஜினிகாந்த் சிவக்னம் (கண்டிஷனிங் பயிற்சியாளர்),பேட்ரிக் ஃபர்ஹார்ட் (பிசியோதெரபிஸ்ட்), விஜய் தஹியா (தலைமை திறன் ஆய்வாளர்).

இதையும் படிங்க:பிசிசிஐ ஒப்புதலுக்காக காத்திருக்கும் யுவராஜ்!

ABOUT THE AUTHOR

...view details