உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த தோனி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தயாராவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இவரின் வருகையால் மீண்டும் சென்னை அணி மீதான க்ரேஸும் கூடியுள்ளதோடு மைதானம் ரசிகர்களால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆனால் நீண்ட நாள்களுக்கு பிறகு தோனி கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளதால் ஃபார்மில் உள்ளாரா, உடல்திறனோடு இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தன. அதற்கு பதிலளிக்கும் வகையில் பயிற்சியின்போது ஐந்து பந்துகளுக்கு ஐந்து சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார்.