2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து மும்பை அணி ஆடுகிறது.
இந்நிலையில், மும்பை அணிக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ட்ரென்ட் போல்ட், ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ளார். மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா தொடரிலிருந்து விலகியதால் போல்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசுகையில், ''நியூசிலாந்து ஒரு சிறிய நாடு. அங்கு இப்போது மழைக்காலம் என்பதால் ஆறு முதல் ஏழு டிகிரி வரை தட்பவெட்ப நிலை இருக்கும். ஆனால் இங்கு பாலைவனங்களுக்கு நடுவே 45 டிகிரி வெப்பம் இருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல் வீரர்கள் தங்களைப் பொருத்திக்கொள்வது தான் மிகப்பெரும் சவாலாக இருக்கும்.