தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'தவானிடன் ஏன் கேப்டன்ஷிப் ஒப்படைக்கவில்லை'- டெல்லி உரிமையாளர் விளக்கம்! - ரிஷப் பந்த்

டெல்லி : டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை தவானிடன் ஏன் கொடுக்கவில்லை என டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி தீரஜ் மல்கோத்ரா விளக்கமளித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான்

By

Published : Mar 20, 2019, 8:19 PM IST

12-வது ஐபிஎல் சீசன் தொடர் மார்ச் 23-ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், முற்றிலும் புதிய பெயர் மற்றும் அணியுடன் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இந்த வருட ஐபிஎல் தொடரின் கோப்பையை கைப்பற்றும் என டெல்லி அணியின் தலைமை செயல் அதிகாரி தீரஜ் மல்கோத்ரா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லி அணியின் மாற்றம் குறித்து அவரிடன் பேசுகையில், 'இந்த தொடரில் தான் முதல்முறையாக டெல்லி அணிக்கு என்று தனி ரசிகர்களை கட்டமைக்க அணி நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.

கேள்வி: ஷிகர் தவான் ஏலத்திற்கு முன்னதாகவே அணிக்குள் வந்தது ஏன்? அவருக்கு கேப்டன்சி கொடுக்கப்படாதது ஏன்?

பதில் : அவர் டெல்லி மாநிலத்தைச் சேர்ந்தவர். தொடக்க வீரர்களில் ஒரு அனுபவ வீரர் தேவை இருப்பது தெரிய வந்தது. அவரை அணுகியதையடுத்து, அணிக்குள் வந்தார்.

கேப்டன்ஷிப் கொடுக்கப்படாதது குறித்து அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அவரும், பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்ததால், ஷ்ரேயஸ் ஐயரே அணியை வழிநடத்துகிறார்.

ரிஷப் பந்த் குறித்து கேட்டபோது..?

ரிஷப் பந்த் மிகவும் இளமையான வீரர். டெல்லி அணிக்காக கடந்த தொடரில் மிகச் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் ஆட்டத்தை முடித்து வைக்கும் வீரராக நிச்சயம் இருப்பார். பயிற்சியாளர் பாண்டிங் இதுகுறித்து நிஷப் பந்திடம் எடுத்துரைப்பார்' என தெரிவித்தார்.


ABOUT THE AUTHOR

...view details