இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நாளை கொல்கத்தாவில் நடைபெறவிருக்கிறது. இந்த ஏலத்தில் 186 வெளிநாட்டு வீரர்கள், 143 உள்நட்டு வீரர்கள் என மொத்தம் 332 பேர் இறுதிகட்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதில் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர்களின் அடிப்படை விலைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
அடிப்படை விலையாக ரூ.2 கோடியை தொட்டவர்கள்:
பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், டெலே ஸ்டெயின், மேத்யூஸ். இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டவர்கள்;
ஈயோன் மோர்கன், ஜேசன் ராய், கிறிஸ் மோரிஸ், கிறிஸ் வோக்ஸ், ஆடம் ஜாம்பா, ஷான் மார்ஷ், டேவிட் வில்லி, கைல் அபோட், கேன் ரிச்சர்ட்சன், இந்திய அணியைச் சேர்ந்த ராபின் உத்தப்பா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ரூ.1 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டவர்கள்:
அரோன் பிஞ்ச், மார்டின் கப்தில், எவின் லூயிஸ், காலீன் முன்ரோ, டாம் பான்டன், அலெக்ஸ் ஹேல்ஸ், ரிலே ரோசோவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சாம் குர்ரான், டாம் குர்ரான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், திசாரா பெரேரா, டி’ஆர்சி ஷார்ட், முஸ்தாபிஸூர் ரஹ்மான், நாதன் கூல்டர்-நைல், ஆண்ட்ரூ டை, டிம் சவுத்தி, ஜேம்ஸ் பாட்டின்சன், லியாம் பிளங்கெட், ஆஷ்டன் அகர் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய வீரர்களான பியூஷ் சாவ்லா, யூசுப் பதான், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ரூ.75 லட்சம் விலையில்;
டேவிட் மில்லர், லென்டல் சிம்மன்ஸ், முஷ்பிகுர் ரஹீம், ஆஷ்டன் டர்னர், கொலின் டி கிராண்ட்ஹோம், பென் கட்டிங், கோரி ஆண்டர்சன், ஜேசன் ஹோல்டர், கிறிஸ் ஜோர்டான், மஹ்முதுல்லா, சீன் அபோட், டேவிட் வைஸ், டேன் கிறிஸ்டியன், மர்ச்சண்ட் டி லாங்கே, இஷ் சோதி,சாகிப் மஹ்மூத் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலிலும் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
ரூ.50 லட்சம் விலையில்:
ஷாய் ஹோப், கிளாசன், ஹெட்மையர், பிராத்வெயிட், நீஷம், மார்க் வூட், ஷம்ஸி, பிராண்டன் கிங் உள்ளிட்ட 70 வெளிநாட்டு வீரர்கள் இந்த விலையடிப்படையில் ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதுபோக, புஜாரா, ஹனுமா விஹாரி, நமன் ஓஜா, சவுராப் திவாரி, மனோஜ் திவாரி, ஸ்டுவர்ட் பின்னி, ரிஷி தவான், மோஹித் சர்மா, ஸரன் ஆகிய இந்திய வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ரூ.50 குறைவான ஏலத்தொகையை உடையவர்கள்:
கேமரூன் டெல்போர்ட் (40 லட்சம்), ஜேம்ஸ் புல்லர் (40 லட்சம்), தீபக் ஹூடா (40 லட்சம்), ஜலாஜ் சக்சேனா (30 லட்சம்), பிரியாம் கார்க் (20 லட்சம்), விராட் சிங் (20 லட்சம்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (20 லட்சம்), இஷான் பொரல் (20 லட்சம்), ரிக்கி பூய் (20 லட்சம்), துருவ் ஷோரே (20 லட்சம்), பாபா அபராஜித் (20 லட்சம்), அர்மான் ஜாஃபர் (20 லட்சம்), தர்மேந்திரசிங் ஜடேஜா (20 லட்சம்), ஜார்ஜ் முன்சி (20 லட்சம்) ஆகியோர் உள்ளனர்.
நாளை நாடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் 73 வீரர்கள் தேர்வாகவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2ஆவது ஒருநாள் போட்டி: சரித்திரத்தை மாற்ற நினைக்கும் வெஸ்ட் இண்டீஸ்; சாதனையைத் தக்க வைக்கப் போராடும் இந்தியா!