ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் கலைகட்டியுள்ளன.
இதில் இன்று (அக். 08) நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேரஸ்டோவ் - டேவிட் வார்னர், எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 97 ரன்களையும், வார்னர் 52 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் கே.எல்.ராகுல் 11 ரன்களிலும், மயங்க் அகர்வால் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி அணியின் ரன் கணக்கை உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூரான் அரைசதம் கடந்தும் அசத்தினார்.