தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

டெல்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

IPL 13 - RR vs DC result
IPL 13 - RR vs DC result

By

Published : Oct 10, 2020, 1:32 AM IST

ஐபிஎல் தொடரில் வெள்ளிக்கிழமை(அக்.9) நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஸ் - ஹெட்மையர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை எடுத்தது. அந்த அணியில் ஹெட்மையர் 45 ரன்களும், ஸ்டோய்னிஸ் 39 ரன்களையும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் என நட்சத்திர வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 34 ரன்களில் விக்கெட்டை இழக்க ராஜஸ்தான் அணியின் தோல்வி உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் தனது ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

ABOUT THE AUTHOR

...view details