இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி, கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இருப்பினும் அவர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஐபிஎல் தொடரில் தோனிக்கு பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய இர்பான் பதான், “ஐபிஎல் தொடரில் தோனி நிச்சயம் களமிறங்குவார் என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பந்துவீச்சாளர்கள், இந்த ஐபிஎல் தொடரில் தோனிக்கு பந்துவீசாததை எண்ணி மகிழ்ந்திருப்பார்கள்.