மும்பை:ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்த வான்கடே மைதானத்தின் 10 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலும், ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த ஆட்டங்கள் நடைபெறும் என பிசிசிஐ நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கடுமையாக்கப்பட வாய்ப்புள்ள சூழல், அங்கு நிலவுகிறது.
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் வாரியத்தின் அலுவலர் ஒருவர் கூறும்போது," 10 ஊழியர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆடுகளத்தைப் பராமரிக்க புதிய ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளோம்.
பிசிசிஐ நியமித்த நிகழ்ச்சி நிர்வாகக்குழுவினர் ஆறு பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.