நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இத்தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், நாளை இத்தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 26ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
பாபர் அசாம், இமாம் உல் ஹக் விலகல்
இதில் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
அதேசமயம் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கிற்கு பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, அவரும் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.