தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 9, 2019, 7:04 PM IST

Updated : Jul 9, 2019, 8:50 PM IST

ETV Bharat / sports

மழை குறுக்கீடு: இந்திய அணிக்கு 20 ஓவர் ஆட்டமாக மாற்றப்படுமா?

மான்செஸ்டர்: உலகக்கோப்பை தொடரின் இந்திய-நியூசிலாந்து அணிகள் மோதும் மிக முக்கிய அரையிறுதி ஆட்டதின் இடையில் மழை குறுக்கிட்டுள்ளது.

மழையில் இந்திய ரசிகர்கள்

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு எந்த அணி செல்லும் என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆரம்பம் முதலே பும்ராவும் புவியும் துல்லியமாகப் பந்து வீசியதால் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கப்தில் மற்றும் நிக்கோலஸ் திணறினர். 14 பந்துகளை எதிர்கொண்ட கப்தில் 1 ரன் மட்டுமே எடுத்து பும்ராவிடம் வீழ்ந்தார்.

அடுத்து ஆட வந்த கேப்டன் வில்லியம்சனும் நிக்கோலசும் நிதானமாக ஆடியதால் அணியின் ரன்ரேட் ஆமை வேகத்தில் நகர்ந்தது. 29 ரன் எடுத்திருந்த நிக்கோலஸ் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தார். பின்னர் அனுபவ வீரர் ராஸ் டெய்லரும் வில்லியம்சனும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால், சஹல் இந்த இணையைப் பிரித்தார். 67 ரன்னில் வில்லியம்சனும் ஆல்ரவுண்டர் நீசம் 12 ரன்களில் வெளியேறினர். வந்த உடன் அதிரடி காட்டிய க்ராண்ட்ஹோம் 16 ரன்னில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும் லாதம் 3 ரன்களும் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து இதே போல் மழை பெய்தால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 20 ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டு நிர்ணயிக்கும் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடும். அதற்கும் மழை இடம் கொடுக்க விட்டால் ஆட்டம் நிறுத்தப்பட்டு நாளை மறு ஆட்டம் நடக்கவும் வாய்ப்புள்ளது. இதுவரை நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

Last Updated : Jul 9, 2019, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details