உலக கோப்பை தொடரின் 40 வது லீக் போட்டியில் இந்திய-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்ததுள்ளது .
CWC19: இந்தியா 314 ரன்கள் குவிப்பு..! - இந்தியா-வங்கதேசம்
பிரிமிங்ஹாம்: வங்கதேச அணிக்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 314 ரன்கள் குவித்துள்ளது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா-ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து. அதன்பின் ராகுலும், கேப்டன் விராட் கோலியும் நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் அரை சதம் அடிக்கும் முன்பே பெவிலியன் திரும்பினார். கேதர் ஜாதவ்க்கு பதிலாக அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக் 8 ரன்னில் வெளியேறினார் . இறுதி ஓவரில் அதிரடி காட்டுவார் என எதிர்பாக்கப்பட்ட தோனியம் 35 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முஸ்டபிஸுர் ரஹ்மான் 59 ரன்களுக்கு 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார்.