இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தலா மூன்று டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் மூலம், இந்திய அணியை 50ஆவது முறையாக வழிநடத்தும் இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளஸ்ஸிஸ் தொடர்ந்து ஆறாவது முறையாக வெளிநாட்டு மண்ணில் டாஸில் தோல்வியை சந்தித்துள்ளார்.